வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
பல்லடம் நாரணாபுரம் ஊராட்சி அருகே செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு அரசு சார்பாக குடிநீர், மின் இணைப்பு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பு உள்ளதாகவும், உடனே அகற்ற வேண்டும் என்று வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குடிநீர், மின் இணைப்பை அதிகாரிகள் துண்டிக்க சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளோம். அதன்பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளை அகற்றும் முடிவேடுத்தால், மாற்று இடம் வழங்கிய பிறகு வீடுகளை அகற்ற வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

