ஏக்நாத் ஷிண்டே வெளியேறியது போல் திமுகவில் இருந்து பல எம்.எல்.ஏக்கள் வெளியேறுவார்கள் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம்
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக வேலூர் இப்ராஹிம், மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறினார்கள். அங்கு பாஜக ஆதரவில் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார். இதுபோன்ற நிலையில் தான் தமிழகத்தில் திமுக ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தன் மகன் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை கொடுப்பதில் திமுக மூத்த பொறுப்பாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உடன்பாடு இல்லை தெரிவித்தார். இதனால் திமுகவில் ஏக்நாத் ஷிண்டே போன்று ஒரு குழு உருவாகும் சூழல் உள்ளதாக கூறினார். திமுகவின் ஸ்லீப்பர் செல்கள் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் நோக்கம் பஜகவிடம் இல்லையென தெரிவித்தார். ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தனித் தமிழ்நாடு என்று கூறுவதை பாஜக வேடிக்கை பார்க்காது. இதற்க்கு தக்க பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

