தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதிம் 10 சதவீதத்தைக் தாண்டியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று மட்டும் 30,899 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 2,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,90,834 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வீடுகளில் தனிமைபடுத்தி கொண்டவர்களையும் சேர்த்து கொரோனா பாதித்து 17,717 பேர் சிகிச்சையில் பெற்றுவருகின்றனர். கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் சுமார் 1,791 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 1,062 பேருக்கும், செங்கல்பட்டில் 403 பேருக்கும், கோயம்புத்தூரில் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

