தமிழ்நாடுபயணம்

இன்று முதல் மெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுகிறது – மெட்ரோ ரயில் நிர்வாகம் !

கொரோனா தொற்று

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்பெயரில் தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டுமே சுமார் 2,743 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவகியிள்ளது. சென்னையில் 1,062 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

முகக்கவசம் கட்டாயம்

அதன்பெயரில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. பொது இடங்களில் முகக்கவசம் அணிய தவறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும், மெட்ரோ ரயிலில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களின் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய தனியாக ஒருவரை பணியில் நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த சூழலில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts