தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஐசியூவில் உள்ளது. திமுக என்ற ஆக்சிஜனைக் கொண்டு சுவாசிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேலியாக பேசியுள்ளார்.
அண்ணாமலை பேச்சு
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்கக்கூடிய நிலையிலேயே இருக்கிறது. அதற்கான ஓட்டுப்பசையை வாங்கி கொடுக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதனை வாங்கி பயன்படுத்த வேண்டும். தமிழக காங்கிரஸ் கட்சி ஐசியூ.விலேயே உள்ளது. கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் வெளியே போக மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடனேயே ஒட்டிக்கொண்டுள்ளது. திமுக கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 25 எம்பிகள் பாஜகவில் இடம்பெறுவார்கள். இதனை காங்கிரஸ் கட்சியினர் பார்க்கத்தான் போகிறார்கள்’ என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

