சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி பிரபல நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல நடிகர்
பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீஜித் ரவி. 46 வயதான இவர் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் கும்கி, அசுரவதம், கதகளி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 4ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு பூங்கா அருகே தனது சொகுசு காருடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பள்ளி சிறுமிகள் முன்பு ஸ்ரீஜித் ரவி நிர்வாணமாக நின்றுள்ளார். மேலும், ஆபாசமாக பேசியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
போக்சோவில் கைது
அந்த சிறுமிகள் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் அது நடிகர் ஸ்ரீஜித் ரவி தான் என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நடிகர் ஸ்ரீஜித் ரவியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

