மொத்தம் 3 பேர் கொண்ட நடிகர் அஜித் அணியினர் அதிக புள்ளிகள் பெற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.
துப்பாக்கி சுடும் போட்டி
மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி ரைஃபிள் கிளப் சார்பில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. எச். வினோத் படத்தில் நடித்து வரும் அஜித் குமார் கடந்த 27ம் தேதி திருச்சி ரைஃபிள் கிளப் சென்று, அங்கு 50 மீட்டர் மற்றும் 20மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்டார். இதனையடுத்து 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வதாக இருந்தார். அனால் அவரின் ரசிகர்கள் ரைஃபிள் கிளப் முன்பு திரண்டதால் நடிகர் அஜித் 28ம் தேதி நடைபெற்ற போட்டியில் பங்கேற்காமல் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், 3 பேர் கொண்ட நடிகர் அஜித்தின் அணியினர் மொத்தம் 6 பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர். இதில் அஜித் அணி 4 பிரிவுகளில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.இதன் பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் அஜித் கலந்து கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

