கோப்ரா படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
கோப்ரா படம்
டிமாண்டி காலனி, இமைக்க நொடிகள் ஆகிய படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோப்ரா. விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது. படம் வரும் ஆக்ஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரீலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், விக்ரம் நடிக்கும் புதிய படத்தையும் இயக்க அஜய் ஞானமுத்து ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புதிய படத்தை ஏ.ஜி.எஸ் தயாரிக்கிறது. கோப்ரா படத்தை தொடர்ந்து உடனடியாக மீண்டும் விக்ரமுடன் அஜய் ஞானமுத்து புதிய படத்தில் இணைகிறார்.

