ஆப்பிரிக்காவை தவிர்த்து உலகில் முதல்முறையாக குரங்கு அம்மை பாதிப்பால் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
உலகம் முழுவதும் 18,000 மேற்பட்டோர் குரங்கு அம்மை தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியா உட்பட உலகம் முழுவதும் 78 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. அதேபோல் பிரேசில் நாட்டில் சுமார் ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேசில் நாட்டை சேர்ந்த 41 வயதான ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமை குரங்கு அம்மை தோற்றால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது உயிரிழந்தார்.

