இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அழைப்பு
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். மேலும், இதன் துவக்க விழா கடந்த 28ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தலைமையில் 3டி தொழில்நுட்பத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில, துவக்க விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டியுள்ளார். இதனை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

