வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை
வங்கிக் கணக்கின் மூலம் மாத ஊதியம் பெறுவோர்கள், சொந்த தொழில் செய்வோர்கள் , வருவாய் ஈட்டுவோர்கள் தங்களது வருமான வரி தொடர்பான விவரங்களை ஆண்டுக்கு ஒருமுறை தாக்கல் செய்வது வழக்கம். மார்ச் மாத இறுதியுடன் முடிவடையும் நிதி ஆண்டுக்கான வருமான வரி விவரங்களை அந்த ஆண்டு ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் மட்டும் வருமான வரித் தாக்கல் செய்ய வருமான வரித்துறை சார்பில் டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது வருமான வரி கணக்கை நாளை தாக்கல் செய்ய தவறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

