தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர் , தேனி, கரூர் , நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்’ என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

