விளையாட்டு

தீபக் ஹூடா எங்கேப்பா? – கொந்தளித்த ஸ்ரீகாந்த் !

முதல் டி20 போட்டியின் போது தீபக் ஹூடா ப்ளேயிங் 11ல் ஏன் இல்லை என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

டி20 போட்டி

நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்க்கு 190 /6 ரன்களை எடுத்து. 191 ரன்களை இலக்காக கொண்டு காலம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 122 /8 ரன்கள் மட்டுமே எடுத்து படுத்தோல்வி அடைந்தது.

IND vs WI
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 அனைவருக்கும் மிக பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் இந்தியாவின் ஓப்பனிங்கில் ஆர்டரில் ரோகித் சர்மாவுடன் – சூர்யகுமார் யாதவ் ஜோடி இருந்ததும், ஒன் டோவ்னுக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் களமிறங்கியது தான். ஆனால் ட்ராவிட்டின் இந்த திட்டம் கைகொடுக்கவில்லை.

ஏனென்றால் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களுக்குஅவுட் ஆனார். ராகுல் ட்ராவிட்டின் திட்டத்தினால் ப்ளேயிங் 11 வரிசை மாறியதால் மிடில் ஆர்டரில் களம் இறங்கிய ரிஷப் பண்ட்னும் களத்தில் நிலைக்காமல் அவுட் ஆனார். இதனால் பலரும் ராகுல் ட்ராவிடை குறை கூறிவந்தனர்.

ஸ்ரீகாந்த் சாடல்

இந்நிலையில் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர்,
‘அணியில் தீபக் ஹூடா எங்கேப்பா? சர்வதேச டி20 போட்டிகளிலும், ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடினார். அவர் நிச்சயம் ப்ளேயிங் 11ல் இடம் பெற்று இருக்க வேண்டும். ஏன் அவர் இடம் பெறவில்லை என்ற காரணம் தெரியவில்லை.

Rahul Dravid

டி20 தொடரருக்கு ஆல்ரவுண்டர்கள் தான் முக்கியம். அவ்வீரர் பேட்டிங் ஆல்ரவுண்டர், பவுலிங் ஆல்ரவுண்டர் என எதுவாக இருந்தாலும் கட்டாயம் அவர் பிளையிங் 11ல் இருக்க வேண்டும். ஆனால் ராகுல் டிராவிட் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முழு நேர பேட்ஸ்மேன் பிளையிங் 11ல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

Srikanth And Rahul Dravid

மேலும், ஒரு புள்ளி விவரத்தை ஸ்ரீகாந்த் கூறினார். அதில், ‘தீபக் ஹூடா இதுவரை 4 இன்னிங்ஸ்களில் 205 ரன்களை அடித்துள்ளார். அவரின் சராசரி 68.33. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 351 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் சராசரி 35 ரன்கள் மட்டுமே. எனவே ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக மாற்றாக தீபக் ஹூடாவை பிளையிங் 11ல் எடுக்க வேண்டும்’ என்று ஸ்ரீகாந்த் மிகுந்த வருத்துடன் கோரிக்கை வைத்துள்ளார்.

Related posts