கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியுள்ள பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ்க்கு உதயநிதி ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
வெப் சீரிஸ்
ஜி 5 நிறுவனம் வழங்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் பேப்பர் ராக்கெட். இதில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஸ்ரீநிதி சாகர் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக இந்த தொடரை தயாரித்துள்ளார். கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இதில் கே.ரேணுகாதரன் குமார் இசையமைத்துள்ளார். ஜி 5 ஓடிடி தளத்தில் நேற்று இந்த வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகரும், கிருத்திகாவின் கணவருமான உதயநிதி ஸ்டாலின், பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், பேப்பர் ராக்கெட் தொடரின் சீசன் 2வுக்கு காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
With my director @astrokiru ! Congrats on ur #PaperRocketOnZEE5 ! Ur best work ! Super writing and execution ! Congrats team! Waiting for season 2 ! pic.twitter.com/HmT1oHzVtp
— Udhay (@Udhaystalin) July 30, 2022

