சமூகம்தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விவகாரம் : 63 யூ டியூப் சேனல்கள் முடக்கம் !

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் வதந்தி பரப்பிய 63 யூ டியூப் இணையதளங்களை முடக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் 12ம் வகுப்பு மாணவி கடந்த 13ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர், தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் உடலை வாங்க மறுத்தனர். மேலும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனையடுத்து நீதிபதி சதீஷ்குமார் முன் இந்த வழக்கு விசரணைக்கு வந்தது, அப்போது இந்த விவகாரம் குறித்து வதந்தி பரப்பிய 63 யூ டியூப் சேனல்கள், 31 டிவிட்டர் கணக்குகளை முடக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

Related posts