இந்தியாசமூகம்தமிழ்நாடு

ஹவுரா – கன்னியாகுமரி அதிவிரைவு இரயிலில் வட மாநிலத்தவர்கள் அட்டூழியம்!

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கன்னியாகுமாரி வரை வாரம் இருமுறை இயக்கப்படும் இரயிலில் வெளிமாநிலத்தவர்கள் முன்பதிவு பயண சீட்டு எடுக்காமல் முன்பதிவு பயண இருக்கையில் பயணித்து வந்தன. இதனால் தாங்கள் முன்பதிவு செய்து வந்த பயணஇருக்கையில் வெளிமாநிலத்தவர்கள் பயணித்து வந்ததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாயின.

பயணிகள் அவதி

குறிப்பாக பயணிகள் தாங்கள் இருக்கையில் இருந்து எழுந்திருக்க கூறியும் வெளிமாநிலத்தவர்கள் எழுந்திருக்காமல் அட்டகாசம் பண்ணியதால் பெண் பயணிகள், தாய்மார்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். பெண் பயணிகள் கழிவறை பயன்படுத்தவோ அல்லது இரவில் தூங்கவோ மிகவும் பாதிப்படைந்தனர். குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் படுக்க இடம் இல்லாததால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாயினர்.

இரயில்வே துறை போலீசாரின் அலட்சியம்

இதனை தொடர்ந்து பயணிகள் அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததால் பயணிகள்அனைவரும் பெரும் கோபம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இரண்டு முறை நடுவழில் இரயில் நிறுத்தபட்டும் இரயில்வே துறை போலீசார் அலட்சியம் காட்டினர்.

தொடர்ந்து இரயில் செங்கல்பட்டு தொடர்வண்டி நிலையத்திற்கு வந்தடைந்ததும் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரயில்வே நிர்வாகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வெளிமாநிலத்தவர்களை இரயில்வே துறை போலீசார் அனைவறையும் வெளியேற்றினர். அதன் பிறகு பயணிகள் அனைவரும் இயல்பாக பயணம் செய்தனர்.

வெளிமாநிலத்தவர்களின் அட்டகாசம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டுபோகிறது. இதனை அரசு கண்டுகொள்ளாமால் அலட்சியத்தை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts