Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு – அரசு கொள்கை வகுக்க கோரி வழக்கு

பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு – அரசு கொள்கை வகுக்க கோரி வழக்கு

March 10, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பான கொள்கையை உருவாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் பல பெண் பணியாளர்கள், மாதவிடாய் காலத்தில் கடுமையான வலியால் அவதிப்படுகின்றனர். அதனை சமாளித்தபடியே அவர்கள் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  பைக் டாக்சியில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த பெண் விபத்தில் சிக்கி பலி - சென்னையில் சோகம்

கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி, பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நல பிரச்சினைகள், ஊதிய இழப்பு மற்றும் பணியிட சிரமங்கள் குறித்து விளக்கி தமிழக அரசுக்கு விரிவான மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

மாதவிடாய் என்பது இயற்கையான உயிரியல் செயல்முறை. அது, உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கும். இது, இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது. பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் அடிப்படையில், மாதவிடாய் விடுப்பு கொள்கையை உருவாக்குவது சட்டப்படி செல்லுபடியாகும் நலத்திட்ட நடவடிக்கையே.

ஏற்கெனவே, கர்நாடகா, பீஹார், ஒடிசா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மாதவிடாய் விடுப்பு தொடர்பான கொள்கைகள் நடைமுறையில் உள்ளன.

இதையும் படிக்க :  மத்தியப்பிரதேசம் : உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து !

ஆகவே, தமிழகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், பெண்கள் நலனை கருத்தில் கொண்டு முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, “இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக தமிழக மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு காலம் 25 ஆக அதிகரிப்பு
Next Article மாநிலங்களவைத் தேர்தல்: தம்பிதுரை, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.