தமிழகத்தில் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம்
இதனால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் இலங்கை கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 3-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
மேலும், சென்னை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

