சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் சமந்தா பட ட்ரைலர்!

வைரலாகும் ட்ரைலர்

நடிகை சமந்தா நடிப்பில், ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு மணிஷர்மா இசையமைக்க, ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘யசோதா’ படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts