சினிமாவெள்ளித்திரை

பத்து தல படப்பிடிப்பு : வைரலாகும் சிம்பு புகைப்படம்!

‘வெந்து தணிந்தது காடு’ வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு புகைப்படம்

பத்து தல படம் 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்க, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், பத்து தல படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சிம்பு நடனமாடியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts