அரசியல்இந்தியா

இந்திரா காந்தி நினைவு தினம் : ராகுல் காந்தி உருக்கமான பதிவு!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

நினைவு தினம் 

இன்று முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நேரில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனிடையே ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘பாட்டி, உங்களின் அன்பு மற்றும் மரியாதையை என் இதயத்தில் சுமக்கிறேன். உங்கள் உயிரை தியாகம் செய்த இந்தியாவை சிதைக்க நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts