விஜய் பாடல்
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தில்ராஜு தயாரிக்கும் இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ பாடல் கடந்த 4-ம் தேதி வெளியானது.
இந்நிலையில், நடிகர் சிம்பு குரலில் உருவாகியுள்ள இப்பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
#TheeThalapathy hits 15M+ views 🔥
🎙️ @SilambarasanTR_ sir
🎵 @MusicThaman
🖊️ @Lyricist_Vivek#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @iamRashmika pic.twitter.com/wXuYplK89l— Sri Venkateswara Creations (@SVC_official) December 7, 2022

