சமூகம் - வாழ்க்கைசினிமா

இயக்குனர் சுந்தர்.சிக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

கவுரவ டாக்டர் பட்டம்

1995-ம் ஆண்டு வெளியான ‘முறை மாமன்’ தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. அதனைத்தொடர்ந்து ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘காபி வித் காதல்’ ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்  இயக்குனர் சுந்தர்.சி -க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இந்த வீடியோவை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts