அமீர் கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமீர்கான் படம்
1994-ம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump). ஆங்கில படமான இது அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. சர்வதேச அளவில் பேசப்பட்ட இப்படத்தை தழுவி தற்போது ஹிந்தி சினிமாவில் உருவாகியிருக்கும் படம் லால் சிங் சத்தா. அமீர்கான் கரீனா கபூர், நாக சைத்தன்யா ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
இந்நிலையில், இந்த படத்தை சிலர் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டதாக புகார்கள் எழுந்தது. அதன்பெயரில், பெங்களூர் பனஸ்வாடி காவல்துறையினர் இதில் சம்மந்தபட்ட சிலரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இதுபோன்ற திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக ஒரு குழுவே இயங்கி வருவது தெரியவந்துள்ளது.

