சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் வைரலாகும் பொன்னியின் செல்வன் க்ளிம்ப்ஸ் வீடியோ !

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

இயக்குனர் மணிரத்னம்

இந்திய திரையுலகின் பிரபல இயக்குனராக அறியப்படுபவர் மணிரத்னம், இவர் இயக்கம், தயாரிப்பு, எழுத்தாளர் என்று திரைத்துறையில் பல்வேறு பங்களிப்பை செய்துள்ளார். 1983ம் ஆண்டு வெளியான ‘பல்லவி அனுபல்லவி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம். அதனைத்தொடர்ந்து பாம்பே, தளபதி, நாயகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கி திரையுலகில் பிரபலமானவர். இவரின் திரையுலக சாதனையை கண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிதுள்ளது.

இயக்குனர் மணிரத்னம்

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் அடுத்தது கல்கி எழுதிய வரலாற்று கதையான பொன்னியின் செல்வனை படமாக எடுத்துள்ளார். அதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ளிம்ப்ஸ் வீடியோ

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தஞ்சையில் உள்ள பெரிய கோவிலில் நடத்த படக்குழு திட்டமிட்டதாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் அப்டேட் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசையில், சோழர்கள் வருகிறார்கள் என்ற வாசகம் வருவது போன்ற க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகியுள்ளது. வெறும் 16 வினாடிகள் மட்டுமே வரும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் நடிகர்கள்

படத்தின் டீசர் மற்றும் பாடல் இந்த வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9ம் நூற்றாண்டின் சோழர்களைப் பற்றிய வரலாறான பொன்னியின் செல்வன் படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts