கல்விதமிழ்நாடு

திறக்கப்படாமல் இருக்கும் புதிய பள்ளி கட்டிடம் – மாணவர்கள் அவதி !

தஞ்சாவூரில் கட்டி முடிக்கப்படும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய பள்ளி கட்டிடம். இதனால் மாணவர்கள் அவதிப்படுவதாக பெற்றோர்கள் குற்றசாட்டு வைக்கின்றனர்.

தஞ்சாவூர் பேராவூரணி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட நாட்டானை கோட்டை உள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் மொத்தமாக 300 மாணவ, மணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கட்டிடத்தில் இரண்டு கட்டிடம் உள்ளது. அதில் ஒரு கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தது.

thanjavur

வகுப்பறை பற்றாக்குறை

இந்நிலையில், மாணவர்கள் வகுப்பறை பற்றாக் குறையான காரணத்தால் மேம்பாட்டு சீரமைப்பு திட்டம் 2020-2021 நிதியின் கீழ் சுமார் 17.32 லட்ச ரூபாய் மதிப்பில் இரண்டு கட்டிடங்கள் கட்டப்பட்ட பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ளது. ஆனால் இதுவரை அந்த கட்டிடமானது திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு வகுப்பறை நடத்த இடமில்லாமல் காரணத்தால் மரத்தடி நிழலிலும், புதிதாக கட்டப்பட்ட பள்ளியின் வராண்டாவில் வகுப்பறை நடத்தப்பட்டு வருகிறது.

திறக்கப்படாத புதிய கட்டிடம்

மேலும், பள்ளி கட்டிடத்தின் அருகே உள்ள அங்கன்வாடி கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையிலுள்ளதால் இதுவரை அந்த கட்டிடமானது கட்டிமுடிக்கப்படாமல் உள்ளது. இதனால், மாணவர்களின் நலன் கருதி கட்டிமுடிக்கப்பட்டுள்ள பள்ளி வகுப்பறையை திறக்கவும், இடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை கட்டித்தரவும் சீரமைத்து தர வேண்டி பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், சேதமடைந்த நிலையில் உள்ள சத்துணவுகூடத்தின் கதவுகளை சீரமைத்து தர வேண்டியுள்ளனர்.

school

ஆட்சியரிடம் மனு

இந்நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பேராவூரணியில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் பள்ளியின் நிலை குறித்து கோரிக்கை‌ மனு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் மனுவின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

Related posts