இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா ? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான் கேள்வி
திருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் கூறியது கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ‘இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா ? இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம் தான். இலவசங்களால் நாடு ஒருபோதும் வளராது. காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக, பாஜக காவி கட்டிய காங்கிரஸ் என கூறினார். அதிமுகவில் நடப்பது அவர்களின் உட்கட்சி பிரச்சினை பெரிய நாட்டாமையிடம் அவர்கள் பேசி தீர்வு காணட்டும். நாம் மக்கள் பிரச்சினை பேசுவோம்’ என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

