தேச நலனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி 8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
சேனல்கள் முடக்கம்
தடை செய்யப்பட்ட சேனல்கள் அனைத்தும் பார்வையாளர்களை தவறாக வழிநடத்தி செய்தி தொகுப்பாளர்களின் புகைப்படங்கள் மற்றும் டிவி சேனல் லோகோக்கள் பயன்படுத்தக்கூடியவை. அவற்றில் 7 சேனல்கள் இந்தியாவை சேர்ந்தவையும் , 1 சேனல் பாகிஸ்தானை சேர்ந்தது என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐடி விதிகள் 2021ன் படி அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து இதுவரை மொத்தம் 102 சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த சேனல்கள் இந்தியாவில் உள்ள மத சமூகங்களிடையே பொய் பிரச்சாரங்களால் வெறுப்பை பரப்புகிறது.
‘இந்திய அரசாங்கம் உண்மையான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் செய்தியை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட முயற்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

