மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் நடந்தது.
நிர்வாகி கொலை
மயிலாடுதுறை, முன்விரோத காரணமாக வன்னியர் சங்கம் முன்னாள் நகர செயலாளர் கண்ணண் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. இந்நிலையில் கண்ணன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய கோரி சாலை மறியல் நடைபெற்றது. இதில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சக்திவேல், பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில், மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

