பிரபல நடிகை
விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வாஷி என்ற மலையாள படம் வெளியானது. கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
2018ம் ஆண்டு வெளியான மகாநதி படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் பெற்றார். மேலும், தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 17, 2022

