உடல் நலக்குறைவால் தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்.
நெல்லை கண்ணன்
பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கிய பேச்சாளரும் நெல்லை கண்ணன் (77) காலமானார். திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், அரசியல் விமர்சகராகவும் விளங்கினார். காங்கிரஸ் கட்சியில் பயணித்த இவர் கடந்த 1970ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார்.
குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாதங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன். இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை சமீபத்தில் பெற்றிருந்தார். 77 வயது நிரம்பிய இவர் வயது முதிர்வின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஒரு வார காலமாக உணவு அருந்த முடியாமலும் அவதிப்பட்டு வந்த நெல்லை கண்ணன் தனது வீட்டில் இன்று மதியம் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

