வெளியீட்டு உரிமை
மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’. இதில் நடிகர் அமீர் முதன்மை கதாபாத்த்திரத்தில் நடிக்க, சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைக்க, தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் பெற்றுள்ளது.

