ட்ரைலர்
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இதில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபிஸ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். மேலும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘கனெக்ட்’ படத்தின் டிரைலர் வருகிற டிசம்பர் 9-ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

