புதிய அப்டேட்
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை நாயகி’. இயக்குனர் ஷான் இயக்கியுள்ள இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம், யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. மேலும், கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘பொம்மை நாயகி’ படத்தின் மூன்றாவது பாடலான ‘அடியே ராசாத்தி’ இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.