பிரபல நடிகர்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனிடையே ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 31-ம் தேதி அவரின் கதாபாத்திரத்தில் பெயர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் மோகன்லால் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.