சினிமாதமிழ்நாடு

இசையமைப்பாளர் டி.இமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

டாக்டர் பட்டம்

2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். மேலும், ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் சிறுத்தை சிவா இயக்கிய ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார். இவர் தற்போது ‘காரி’, ‘வள்ளி மயில் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், இசையமைப்பாளர் இமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இதனை டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts