பீஸ்ட் படத்தை அடுத்து நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரபல நடிகர்
இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க விஷாலிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

