ஆன்மீகம்சினிமா

வைரலாகும் யுவனின் யாத்திரை புகைப்படங்கள்!

புகைப்படங்கள்

சரத்குமார் நடிப்பில் 1997-ல் வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. அதனைத்தொடர்ந்து தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். இதனிடையே இவர் 2015-ம் ஆண்டு ஷஃப்ரூன் நிஷா என்ற ஆடை வடிவமைப்பாளரை திருமணம் செய்து கொண்டார். மேலும், தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டதாக அறிவித்தார்.

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா ‘உம்ரா’ என்ற புனித யாத்திரையாக மெக்கா மற்றும் மதினாவுக்கு சென்றுள்ளார். யுவன் உம்ராவுக்கான ஆடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts