சினிமாவெள்ளித்திரை

ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வாத்தி பட அப்டேட்!

புதிய  அப்டேட்

‘நானே வருவேன்’ படத்தை அடுத்து நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்க, தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வருகிறார். இந்த படம் தெலுங்கில் ‘சார்’ என்ற தலைப்பிலும், தமிழில் ‘வாத்தி’ என்ற தலைப்பிலும் வெளியாகவுள்ளது. மேலும், சம்யுக்தா மேனன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘வாத்தி’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts