பெங்களூரு பயணம்
பிரபல கன்னட நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாரின் கலைப்பணியை போற்றும் வகையில் மிக உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை அவருக்கு அறிவித்து கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.
மேலும், இந்த விருதை வழங்க நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றுள்ளார்.

