சமூகம்சினிமா

நடிகை ரம்பா சென்ற கார் விபத்து : மகள் மருத்துவமனையில் அனுமதி!

கார் விபத்து

சுந்தர்.சி இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அதனைத்தொடர்ந்து செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ் ஆகிய படங்களில் நடித்து 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இரண்டு மகள்களும், இவருக்கு ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், கனடாவில் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது, ரம்பாவின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அவரது மகள் சாஷாமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts