உலகம்சினிமா

ஜப்பானில் களமிறங்கும் விஜய் படம்!

இந்தியாவில் வெற்றி பெறும் பெரிய நடிகர்களின் திரைப்படங்களை ஜப்பானில் வெளியிடுவது வழக்கம்.

ஜப்பான் வெளியீடு 

அந்தவகையில் ரஜினிகாந்தின் முத்து படம், கார்த்தி நடித்த கைதி, ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற சில திரைப்படங்கள் ஜப்பானில் வெளியிடப்பட்டது. இந்த படங்களுக்கு ஜப்பான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

விஜய் படம்

இந்நிலையில், விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தையும் ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளனர். இப்படத்தை ஜப்பானில் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Related posts