சினிமாவெள்ளித்திரை

‘துணிவு’ பட ப்ரோமோஷனலில் அஜித்? – அஜித் தரப்பில் விளக்கம்!

‘ஏ.கே. 61’

வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘துணிவு’. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனிடையே இத்திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

விளக்கம்

அதன்படி ‘துணிவு’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை படக்குழு திட்டமிட்டது. இதில் நடிகர் அஜித் கலந்துகொள்ளப்போவதாக கூறப்பட்டது. இந்நிலையில், ‘ஒரு நல்ல படம் தானாக விளம்பரப்படுத்திக்கொள்ளும்’ என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அஜித் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts