வைரல் புகைப்படங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கவுதம் கார்த்திக். நடிகர் கார்த்திக் மகனான இவர் தொடர்ந்து தமிழில் வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் அடுத்ததாக சிம்பு நடித்து வரும் ‘பத்து தல’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனிடையே கவுதம் கார்த்திக் ‘தேவராட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த மஞ்சிமா மோகனை காதலிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.
இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தை கவுதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
❤️♾️🧿 pic.twitter.com/RlAlpLO2oS
— Gautham Karthik (@Gautham_Karthik) October 31, 2022

