புதிய பாடல்
வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் ஆகிய படங்களை இயக்கியத்தின் பிரபலமானவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அநீதி’. இப்படத்தில் கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், சார்ப்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமான துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ‘அநீதி’. படத்தின் ‘திகட்ட திகட்ட காதலிப்போம்’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Glad to launch #ThikattaThikattaKathalippom from #Aneethi.
A @Vasantabalan1 film!
A @gvprakash musical. Lyrics by late #Na_Muthukumar@UBoyzStudios @iam_arjundas @officialdushara @thinkmusicindia— A.R.Rahman (@arrahman) October 31, 2022

