பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
மோடி பேச்சு
பின்னர் பேசிய அவர், ‘குஜராத் பாலம் விபத்தால் என் இதயம் வலியுடன் நிறைந்துள்ளது. இருப்பினும் மறுபுறம் கடமை இருக்கிறது. நான் கெவாடியாவில் இருந்தாலும் என் மனம் மோர்பியில் பாதிக்கப்பட்டவர்களுடன் தான் உள்ளது. மேலும், நாடு முழுவதும் இருந்து பாரம்பரிய குழுக்கள் கெவாடியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களது நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது’ இவ்வாறு கூறினார்.
இந்த விபத்து காரணமாக குஜராத்தில் இன்று மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.