2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ.
ஹிந்தி படம்
அதனைத்தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது.
புதிய படம்
இந்நிலையில், இயக்குனர் அட்லீ அடுத்ததாக பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை சந்தித்து ஒரு காமெடி கதையை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

