தமிழ்நாடுபயணம்

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு!

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டணம் உயர்வு

வருகிற 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது. இதனால் தீபாவளிக்கு முன்பு வெள்ளிக்கிழமை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதனையொட்டி 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படவுள்ளது. அதேபோல் சொகுசு பயணத்தை விரும்பும் பயணிகள் ஆம்னி பேருந்தை தேர்ந்தெடுப்பது வழக்கம்.

இதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

Related posts