பிரபல ஹிந்தி நடிகை
பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி . இவர் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இவர் அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. மேலும், ராஜமௌலி இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மகேஷ் பாபு எஸ்.எஸ்.எம்.பி. 28 படத்தை முடித்துவிட்டு ராஜமௌலி படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

