சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

தூத்துக்குடி : வாலிபரை மதுபாட்டிலால் தாக்கியவர் கைது !

தூத்துக்குடியில் வாலிபரை மதுபாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை மிரட்டல்

ஆரோக்கியபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமியின் மகன் ராகவேந்திரா (22). இவர் நேற்று விவேகானந்தா நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சவேரியார்புரத்தை சேர்ந்த ராஜ் மகன் செல்வகுமார் (22) மற்றும் சிலர் சேர்ந்து ராகவேந்திராவை வழிமறித்து தகராறு செய்து உள்ளனர். திடீரென மதுபாட்டிலால் ராகவேந்திராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் தாளமுத்துநகர் காவல்நிலைய துணை ஆய்வாளர் மரிய இருதயம் வழக்கு பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் விசாரணை செய்து தேடிவருகின்றனர்.

Related posts